முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

31 Mar 2026, 4:50 pm
திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
<p><strong>திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 31- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் என்.டிவெங்கடாசலம் பாலப்பாளையத்தில் வாக்கு சேக ரிப்பு பயணத்தை செவ்வாயன்று தொடங்கினார். தொடர்ந்து &nbsp;சின்னியம்பாளையம், சூலக்காத்தான் வலசு, வாவிக்கடை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பூவம்பாளையம், ஆசிரியர் காலனி, சோழி பாளையம் மாந்தம்பாளையம், கல்லங்காட்டு புதூர் ஆகிய பகுதிகளிலும் வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், பெருந்துறை தாலுகா செய லாளர் ஆர்.அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ஏ. விஸ்வநாதன், டி.நவீன், திமுக ஒன்றியச் செயலாளர் பிரகாஷ், விசிக விஜயபாஸ்கர், கொமதெக மாரப்பன், சிபிஐ சின்ன சாமி, தேமுதிக செல்வகுமார், மநீம முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram