திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்
2 Apr 2026, 3:50 pm
<p><strong>திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, ஏப். 2- ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், வியாழக்கிழமை காலை 11 மணி யளவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வானபுரத்தில் உள்ள தேர்தல் அலு வலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி சுமதியிடம் தனது மனுவை வழங்கினார். மூன்றாவது முறையாக இத்தொகுதி யில் போட்டியிடும் அவருடன் தொகுதிப் பொறுப்பாளர் பெருநற்கிள்ளி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக வந்தி ருந்தனர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் வை.பழனி, மாவட்டக் குழு உறுப்பினர் யூதஅம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.</p>
