முந்தய பக்கம்

கே.வி.குப்பத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி உறுதி

3 Apr 2026, 6:05 pm
கே.வி.குப்பத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி உறுதி
<p><strong>கே.வி.குப்பத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி உறுதி</strong></p> <p>வேலூர், ஏப். 3 &ndash; கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மரு. ராஜேஸ்வரி, கிழக்கு ஒன்றிய ஊராட்சிகளான தொண்டான்துளசி, அரும்பாக்கம், செஞ்சி, பனமடங்கி, பள்ளத்தூர் மற்றும் மாளியப்பட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். முருகேசன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலை வர் பாரதி வெங்கடேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வேட்பாளர் ராஜேஸ்வரி, கே.வி.குப்பம் தாலுகாவிற்கு புதிய மருத்துவமனை அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தி பெற்றுத் தருவேன் என்றும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த துரித நட வடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram