நிர்வாக அமைப்பத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர் உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!
11 Apr 2026, 5:30 am

நிர்வாக அமைப்பத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர் உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!

உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து, அவற்றுக்கான தீர்வுகளுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் பிரச்சார நடைமுறை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உடுமலையில் போட்டியிடும் அவர், பெரியகோட்டை, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், உடுமலை நகரை அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவதே எனது முதல் பணி என்றார்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.