முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் பெ.க.தி.சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளர் பெ.க.தி.சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு
<p><strong>திமுக வேட்பாளர் பெ.க.தி.சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெ.க.தி.சரவணன், வெள்ளியன்று தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப. செல்வன், ஒன்றிய செயலாளர் பி. கந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram