பூம்புகார் தொகுதியில் திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் தீவிரப் பிரச்சாரம்
5 Apr 2026, 5:18 pm
<p><strong>பூம்புகார் தொகுதியில் திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் தீவிரப் பிரச்சாரம்</strong></p>
<p>மயிலாடுதுறை, ஏப். 5- பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிவேதா எம். முருகன், செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம், மேலையூர், கருவாழைக்கரை, நடுக்கரை கீழையூர், மூடிகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒன்றியச் செயலாளர் பி.எம். அன்பழகன், திமுக செயற்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி, மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
