திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பு
9 Apr 2026, 5:30 am

திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பு

வேலூர், ஏப்.8- வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதி பொது மக்களிடம் துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

18 வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தெரு, பள்ளித்தெரு, மடத்தெரு, சாவடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பரசுராமன், மாமன்ற உறுப்பினர் இரா.சக்கரவர்த்தி, பகுதி செயலாளர் ஆர்.சிவக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.