மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வாக்குறுதி
9 Apr 2026, 5:30 am

மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வாக்குறுதி

உடுமலை, ஏப். 8- மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில், வன உரிமைச் சட்டத்தின்படி அனைத்து அரசுத் திட்டங்களும் முறையாக அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் ஜெயராம கிருஷ்ணன் வாக்குறுதி அளித்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அவர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட தளிஞ்சியால், கோடாந்தூர், பொறுப்பாறு, குருமலை, குப்பாட்டி, மாவடப்பு உள்ளிட்ட 18 மலைவாழ் குடியிருப்புகளில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மக்களிடையே அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில்தான் மலை கிராமங்களுக்குத் தேவையான சாலைகள் மின்விளக்குகள் மற்றும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. மேலும், அனைத்து குடியிருப்புகளையும் இணைக்கும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக, வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததும், மலைப் பகுதிகளில் விளையாடி விளையாடும் களை சந்தைப்படுத்த உடுமலை நகரில் பிரத்யேகக் கடைகள் கட்டித் தரப்படும். அத்துடன், மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக வசிப்பதற்கு வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,” என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில், மாநகராட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வம், திமுக ஒன்றியச் செயலாளர் பாபு மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் குப்புசாமி, மணிகண்டன், நாகன், ஆனந்தன், சுப்பிரமணியம், முருகன், செந்தில், கண்ணம்மாள், செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.