சிபிஎம் ஒன்றிய நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>சிபிஎம் ஒன்றிய நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர்</strong></p>
<p>அரியலூர், ஏப். 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாகிகளைச் சந்தித்து, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பகுதி மக்கள், இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை கேட்டு கோரிக்கை வைத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சாவடி கிளையில், கட்சி ஒன்றியச் செயலாளரும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான எம். வெங்கடாசலம் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன், நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, அவரிடம் வீட்டு மனை பட்டா, கல்வி உதவி தொகை சம்மந்தமாக அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றித் தருவதாக திமுக வேட்பாளர் கண்ணன் உறுதியளித்தார். மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு பகுதி மக்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடமும் கேட்டுக் கொண்டார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, மைதீன்ஷா, ரவீந்திரன், கிளைச் செயலாளர்கள் மகேந்திரன், முத்து சிவனேசன், ராஜேந்திரன், இதயத்துல்லா மற்றும் உறுப்பினர்கள் ஷர்மிளா, ஹாசிமா, மல்கிநிஷா, ராஜாங்கம் வீரப்பன், ஆயிஷா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.</p>
