பெரம்பலூரில் திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வேட்பு மனுத் தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>பெரம்பலூரில் திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வேட்பு மனுத் தாக்கல்</strong></p>
<p>பெரம்பலூர், ஏப். 4- பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி (தனி) வேட்பாளர் ச.த. ஜெயலெட்சுமி, பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மு. அனிதாவிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நிகழ்வில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் கோகுல கிருஷ்ணன், கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
