தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் அறிமுகம்

5 Apr 2026, 6:26 pm
திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் அறிமுகம்
<p><strong>திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் அறிமுகம்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, ஏப்.5- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் திருச்சி மெயின் ரோடு கலை ஞர் திடலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் அறிமுக கூட்டம் (ஏப்.5) ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திமுக வேட்பாளர் வசந்த வேலுவை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். &nbsp;டெல்லி தோற்கப்பட வேண்டும் என்றால் தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை இங்குள்ள தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். &nbsp; இந்த தேர்தலில் டெல்லி தோற்கப்பட வேண்டும் என்றால் தமிழ்நாடு வெல்ல வேண்டும் ஏனென்றால் டெல்லி, தமிழ்நாடு வஞ்சிக்கிறது,ஒன்றிய அரசாங்கத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமாவது வருகின்றதா? நம் அரசாங்கத்தின் சார்பாக போடுகின்ற திட்டங்கள் எதற்காவது ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கின்றதா? தமிழகம் போடும் திட்டம் எதற்கும் நிதி கொடுப்பதில்லை.கல்வி மானியம் 2000 கோடி ரூபாயை இதுவரை ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வில்லை கல்வி மானியம் வந்தால் தானே பள்ளிக்கூடம் கட்ட முடியும் கல்வியில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதன்மையாக விளங்குவது தமிழ்நாடு இதனை ஒன்றிய அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் தமிழ்நாடு முதலிடத்தில் தான் இருக்கும் என்றார் வேலு. முன்னதாக பேசிய வேட்பாளர் வசந்த வேல் உருக்கமாக பேசினார். இந்த கூட்ட த்தில் &nbsp;கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.உதயசூரியன், கள்ளக் குறிச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஜே.மணிக்கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் ,சிபிஎம் மாவட்ட செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், காங்கிரஸ் எம். இதயத்துல்லா,தேமுதிக எஸ்.கருணாகரன், மதிமுக கே.ஜெய்சங்கர், விசிக அறிவுக்கரசு, மமக ஏ.பசல்முகமது உள்ளிட்ட&lsquo; திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகரச் செயலாளர் த.டேனியல்ராஜ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.