தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் உறுதி

1 Apr 2026, 4:02 pm
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத  தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்  தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் உறுதி
<p><strong>சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத &nbsp;தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் &nbsp;தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் உறுதி</strong></p> <p>தூத்துக்குடி,ஏப்.1- தூத்துக்குடியில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகை யில் புதிய தொழிற்சாலை கள் கொண்டுவரப்படும் என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சட்ட மன்றத் தொகுதி மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி &nbsp;செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கி னார். மேயர் ஜெகன் பெரிய சாமி முன்னிலை வகித்தார். அமைச்சரும், தூத்துக் குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசு கையில், &ldquo;தமிழக முதல மைச்சர் கடந்த 5 ஆண்டுக ளில் செய்த திட்டங்களால், தமிழகம் இன்று இந்தியா வின் முன்னோடி மாநிலமா கத் திகழ்கிறது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம் படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்ட மைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் &lsquo;உதயசூரியன்&rsquo; சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் சிப்காட் வளாகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சிறப்புப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும். தூத்துக்குடி மாநக ராட்சியில் விடுபட்ட 15, 16, 17, 18 ஆகிய 4 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைந்து செயல் படுத்தப்படும். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரயில்வே மேம் பாலங்கள் மற்றும் பல்வேறு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக் குடியில் எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழலு க்கு பாதிப்பு ஏற்படாத வகை யிலான தொழிற்சாலைகளே கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். &nbsp;இக்கூட்டத்தில் காங்கி ரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண் முகம், வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ். அர்ஜூனன், தா. ராஜா, இரா. பேச்சிமுத்து, மாநகர் செயலாளர் எம்.எஸ்,முத்து,சிபிஐ மாவட்டச் செயலாளர் கரும்பன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி மாவட்டச் செயலா ளர் விமல் வெங்காலியார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் &nbsp;பெருந் திரளாகக் கலந்துகொண்ட னர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக் குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் மிகப் பெரிய வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற வேண்டும் . கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது . அதிமுக-பாஜக கூட்டணி யை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று பேசினார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.