மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா வேட்புமனுத் தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா வேட்புமனுத் தாக்கல்</strong></p>
<p>மன்னார்குடி, ஏப். 4- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான யோகேஸ்வரனிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, மன்னார்குடி தேரடியிலிருந்து பேரணி புறப்பட்டது. கூட்டணித் தொண்டர்கள் அணிவகுக்க பேரணி பெரியார் சிலை வந்து, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கூட்டணியின் தலைவர்கள், மன்னார்குடி தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்க, நகரின் முக்கிய கடை வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இப்பேரணியில், கூட்டணியின் தலைவர்கள் மற்றும் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த. சோழராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி தொகுதி பொறுப்பாளர் கே.பி. ஜோதிபாசு, திமுக ஒன்றியச் செயலாளர் சித்தேரி சிவா, நகரச் செயலாளர் வீரா கணேசன், சிபிஎம் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜி. தாயுமானவன், கே. ஜெயபால், துணை பொறுப்பாளர் ஜி. முத்துக்கிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலாளர் ப. பாலச்சந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
