விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் தீவிர வாக்கு சேகரிப்பு
3 Apr 2026, 6:05 pm
<p><strong>விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>விழுப்புரம், ஏப். 3- விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன், வெள்ளிக்கிழமை அன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் சார்பில் போட்டியிடும் அவர், விழுப்பு ரம் தொகுதிக்குட்பட்ட குமளம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரி ப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின் போது திமுக மாவட்டப் பொருளாளர் ஆர்.எஸ். ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் (சேர்மன்) வாசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. சங்கரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.</p>
