பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி
8 Apr 2026, 5:30 am

பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

நாமக்கல், ஏப்.7: குமாரபாளையம் தொகுதி பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் என நாமக்கல் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பாலு வாக்குச் சேகரிப்பின் போது உறுதி கூறினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று காலை 8 மணி முதல் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாயக் கழிவு நீர் பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் சாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.