திருச்சி விரைவு செய்திகள்
11 Feb 2026, 5:52 pm

குன்னம் தொகுதியில் திமுக பரப்புரை பொதுக் கூட்டம்

பெரம்பலூர், பிப்.11 - பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி சார்பில் “தமிழ் நாடு தலைகுனியாது” குன்னம் சட்டமன்றத் தொகுதி பரப்புரை பொதுக் கூட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலா ளர் தி.மதியழகன் வரவேற் புரை யாற்றினார். நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள், ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொண் டர்கள் கலந்து கொண்ட னர்.

வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி

தஞ்சாவூர், பிப்.11 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சோழகனார்வயல் கிராமத்தில் கடந்த பிப்.7 ஆம் தேதி வெறிநாய் ஒன்று பொதுமக்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்தது. இதில் வெறி நாய்க்கடி யால் பாதிக்கப்பட்ட 5 பொது மக்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். அவர் களுக்கு தொடர்ந்து தடுப்பூசி தவணை முறை யில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கால் நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மரு. இ.விஜயராகவன் வழிகாட் டுதலின்படி, உடனடியாக சோழகனார்வயல் கிரா மத்தில் 25 வளர்ப்பு நாய் களுக்கு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாடு கள், ஆடுகள் மற்றும் நாய்களுக்கு இரண்டாம் தவணை வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடைத் துறை மருத்துவர்கள் சுரேஷ், விவேக், பிரகாஷ் தலை மையிலான குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்ட னர்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை, பிப்.11 - திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டமன்ற, நாடாளு மன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக தேர்தலை சந்தித்துள்ளது. தற்பொழுதும் அதே கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முடியும் வரை யாரும் தனித் தனியாக பேட்டி கொடுக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளின் தலைமை பேசி தொகுதிகளை இறுதி செய்வார்கள்” என்றார்.

ஆட்டோ ஓட்டுநர்களை கோபப்படுத்திய பாஜக பெண் தலைவரின் சர்ச்சை பேச்சு

மயிலாடுதுறை, பிப்.11 - மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா அங்காடி முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு தவறியதாக குற்றம் சாட்டி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் நாஞ்சில்பாலு தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் நர்மதா பேசுகை யில், “திமுக ஆட்சியில் பெண்கள் ஆட்டோவில் செல்வ தற்குகூட பாதுகாப்பு இல்லை” என்றார். அப்போது எதிரே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், “ஆட்டோவில் சென்றால் பாது காப்பு இல்லை என்று எப்படி எங்களை அவமதிக்கலாம்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்தும், பாஜக தலைவர்களாலேயே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பினர். பாஜக பெண் நிர்வாகியின் இந்த அவதூறு பேச்சுக்கு, இந்திய தொழிற்சங்க மையத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார்.

காரில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு: 4 பேர் கைது

தஞ்சாவூர், பிப்.11 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே காரில் கடத்தப்பட்ட தொன்மையான இரு சிலைகளைச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினர் மீட்டு, 4 பேரை கைது செய்தனர். இது குறித்து சிலைத் திருட்டு தடுப்பு காவல் பிரிவினர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினர் பிப்.6 ஆம் தேதி இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அப்பகு தியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை யிட்ட சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினர், சாக்குப் பையில் சுற்றப்பட்டிருந்த இரு சிலைகளை மீட்டனர். இவை 14 - 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விஜய நகரப் பேரரசு காலத்தைச் சார்ந்த சுதர்சனர் என்ற விஷ்ணு சிலை, பெண் தெய்வமான தேவி சிலை என்பது தெரிய வந்தது. இதில், சுதர்சனர் என்ற விஷ்ணு சிலை 77.30 கிலோ எடையும், 90 செ.மீ. உயரமும், 48 செ.மீ. அகலமும், தேவி சிலை 35.45 கிலோ எடையும், 73 செ.மீ. உயரமும், 31 செ.மீ. அகலமும் கொண்டவை. இரு சிலைகளும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கோவிலி லிருந்து திருடப்பட்டிருப்பதும், இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி பெருந்தொகைக்கு விற்க முயற்சி செய்திருப்ப தும் தெரிய வந்தது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தஞ்சாவூர் சரக காவல் ஆய்வாளர் ஏ.காவேரியம்மாள், உதவி ஆய்வாளர் கே. தண்டாயுதபாணி வழக்குப் பதிந்து, திரு வாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த ச.மணிகண்டன் (41), திரு வாரூர் விஜயபுரத்தைச் சேர்ந்த க.ராமச்சந்திரன் (41), திருத்துறைப்பூண்டி மேல பாண்டியைச் சேர்ந்த வீ.முகிலன் (36), எடையூர் சங்கேந்தியைச் சேர்ந்த செ.ஜான்சன் (41) ஆகியோரை கைது செய்தனர். நான்கு பேரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட னர். மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இறைச்சிக் கடை தொழிலாளர்கள் போராட்டம்

பொன்னமராவதி, பிப்.11 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத் திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் குமார், சாலையோர வியாபாரி சங்க செயலாளர் தீன், தலைவர் சாத்தையா, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் மதியரசி, தலைவர் லதா, இறைச்சிக்கடை தொழி லாளர் சங்க நிர்வாகிகள் அக்பர், அப்பாஸ் ஆகியோர் பங்கேற்றனர். பொன்னமராவதி பேரூராட்சி மூலம் பல ஆண்டு களாக இறைச்சி கடை நடத்தி வரும் தொழிலாளர் களுக்கு புதிய கட்டிட வளாகம் அமைந்த பின்பு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப் பட்டது. தற்போது அந்த வாக்குறுதியை மீறும் பேரூ ராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஏற்கனவே இறைச்சி கடை நடத்தி வருபவர்களுக்கு கடை அளித்துவிட்டு மீத மிருக்கும் கடைகளை ஏலத்தில் விட வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தை தொடர்ந்து சிஐடியு மாவட்டச் செய லாளரிடம் பேசிய பொன்னமராவதி வட்டாட்சியர், பிப்.16 ஆம் தேதி இது தொடர்பான பேச்சுவார்த்தை நடை பெறும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.