முந்தய பக்கம்

ரெட்டியார்பட்டியில் நீர் மோர் பந்தல்

26 May 2026, 10:08 pm
ரெட்டியார்பட்டியில் நீர் மோர் பந்தல்
<p><strong>ரெட்டியார்பட்டியில் நீர் மோர் பந்தல்</strong></p><p>தென்காசி, மே 26- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ‌.சிவபத்மநாதன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள் தலைமை வகித்தார். கிளைச் செயலா ளர் மாஞ்சோலைத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். சார்லஸ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தம்மாள்புரம் ஆர்.பி. முருகன், தெற்கு காவலாக்குறிச்சி செல்வராஜ், கீழக்கலங்கல் சந்திர சேகர், வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கணபதி, ஆலங்குளம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன். காவலாக்குறிச்சி செயலாளர் அந்தோணி ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram