தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

5 Jun 2026, 1:02 am
​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

சென்னை, ஜூன் 4 - ஜூன் 8 அன்று தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: திமுக, “நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக திணிக்கப்பட்ட எஸ்ஐஆர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, வக்பு சட்டம், எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்தையும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாக திமுக துணிச்சலுடன் எதிர்த்து நின்றது; நாடாளுமன்றம், சட்டமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் வாதாடியும் போராடியும் வந்தது இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அதன் மையச் சக்தியாக திமுக இயங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சனைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இதனை கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் நன்கு அறிவார்கள். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்கா யமுற்றிருக்கும் திமுக-வினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஜூன் 8 அன்று தில்லியில் நடைபெறும் காங்கிரஸ் பங்கேற்கும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாது. இதே நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்கும் மற்ற கட்சிகள் முன்வைக்கும்- நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சனைகளில் திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பறிபோகும் 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்:

முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்! சென்னை, ஜூன் 4- சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான 152 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்றக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால், இந்த 152 இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களில் 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு, 152 இடங்கள் காலியாக இருந்த நிலையில், தமிழ்வாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அந்த இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்றக் கோரினார். ஏப்ரல் மாதத்தில் திமுக அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதாடப்பட்டு அந்த இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மே 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணையில் அரசு வழக்கறிஞர் தேவையான வாதங்களை எடுத்து வைக்கத் தவறியதோடு, அந்த 152 இடங்களை சரண்டர் செய்வதாக ஒப்புக்கொண்டதால் அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றம் மே 29 அன்று உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், இதயநோய், புற்றுநோய், நரம்பியல் நோய்கள் உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று உதயநிதி எச்சரித்துள்ளார். கலைஞர் ஆட்சியில் 2000-ஆம் ஆண்டிலிருந்து நிலைநாட்டப்பட்டு, 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்ட அரசுப் பணி மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இப்போது பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு, அந்த 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.