ரயிலில் ரூ. 4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் நயினார் மீது வழக்கு பதியாத அமலாக்கத்துறை : நீதிமன்றத்தில் திமுக முறையீடு
26 Mar 2026, 2:46 pm
<p><strong>ரயிலில் ரூ. 4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் நயினார் மீது வழக்கு பதியாத அமலாக்கத்துறை : நீதிமன்றத்தில் திமுக முறையீடு</strong></p>
<p>சென்னை, மார்ச் 26 - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவுசெய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பா ளரான நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியரிடம் இருந்து இப்பணம் பறிமுதல் செய்யப் பட்டது. தொகுதி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இப்பணம் கொண்டு செல்லப்பட்ட தாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நயினார் நாகேந்தி ரன் மீது வழக்குப் பதிவுசெய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பி னர் கிரிராஜன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நயி னார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபி சிஐடி ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூல வழக்கு பதிவான போதிலும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருப்ப தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.</p>
