தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்!

11 Apr 2026, 5:30 am
திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்!

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்!

தருமபுரி, ஏப்.10- தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் எ.வ.வேலு நம்பிக்கையுடன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதி திமுக வேட்பாளர் அகண்டமுதம் அறிமுகக் கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வியாழன்று நடைபெற்றது.

கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி., தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ஜிஎஸ்டி பகிர்வில் ஒன்றிய அரசு வஞ்சகம் செய்கிறது. ரூ.100 வரி செலுத்தினால், அதில் நமது மாநிலத்துக்கு ரூ.22 திரும்ப கிடைக்கிறது. ஆனால் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான தேர்தல் ஆகும். எனவே, அரூர் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் அகண்டமுத்தைத் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.

இக்கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் பி.பழனியப்பன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், ஒன்றியச் செயலாளர் பி.குமார், விசிக மாவட்டச் செயலாளர் சி.கே.சாக்கன்ராசா, மதிமுக மாவட்டச் செயலாளர் கோ.ராமதாஸ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கபூர், தொகுதி பார்வையாளர் அ.சத்தியமூர்த்தி, நகரமன்ற துணைத்தலைவர் சூர்யா தனபால், திமுக நகரச் செயலாளர் முல்லை ரவி, ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.செந்தாரசு, சி.தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.