முந்தய பக்கம்

திமுக கூட்டணி 189 இடங்களை வெல்லும்!

2 Apr 2026, 5:30 am
திமுக கூட்டணி 189 இடங்களை வெல்லும்!

திமுக கூட்டணி 189 இடங்களை வெல்லும்!

லோக் போல் கருத்துக்கணிப்புத் தகவல்

சென்னை, ஏப். 1 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 181 முதல் 189 இடங்களில் வெற்றி பெறும் என்று லோக்போல் அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தக் கூட்டணிக்கு 40.1 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்றும், அந்தக் கூட்டணிக்கு 29 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புதிதாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 23 சதவீத வாக்குகளும், 8 முதல் 10 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று லோக்போல் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, 41 சதவீதம் பேர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், 27 சதவீதம் பேர் நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதில், அதிமுக-வின் கோட்டை எனப்படும் மேற்கு மண்டலத்தில் இந்த முறை திமுக கூட்டணி 44 முதல் 46 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வெறும் 9 முதல் 10 தொகுதிகளிலும், தவெக 2-3 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram