தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும்!

23 Mar 2026, 3:39 pm
திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும்!
<p><strong>திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும்!</strong></p> <p>சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் &nbsp;திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்கு களும், அதிமுக கூட்டணி 38.5 சதவீத &nbsp;வாக்குகளும், தவெக 9.7 சதவீத மும், நாதக 4.8 சதவீதமும், பிற கட்சிகள் மற்றும் நோட்டா சேர்ந்து 2.1 சதவீதமும் பெறும் என அக்னி நியூஸ் சர்வீசஸ் (ஏஎன்எஸ்) நிறுவனம் &nbsp;கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. &nbsp;கடந்த பிப்ரவரி 7 முதல் மார்ச் &nbsp;12 வரை வயது வாரியாக நடத்தப் பட்ட இந்தக் கணிப்பை நிறுவனத் தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ்குமார் சென்னையில் செய்தி யாளர்களிடம் வெளியிட்டார். மண்டல வாரியாக கணிப்பு தென் மண்டலத்தில் உள்ள 58 &nbsp;தொகுதிகளில் திமுக 42 இடங்களி லும், அதிமுக 16 இடங்களிலும் வெல்லும். மேற்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் திமுக 32, அதிமுக 18 &nbsp;என வெற்றி பெறும். மத்திய மண்டலத் தில் 37 தொகுதிகளில் திமுக 35 &nbsp;இடங்களிலும், அதிமுக வெறும் 2 &nbsp;இடங்களிலும் மட்டுமே வெல்லும். &nbsp;வடக்கு மண்டலத்தில் 52 தொகுதி களில் திமுக 35 இடங்களும், அதிமுக 17 இடங்களும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை &nbsp;மண்டலத்தில் திமுக 36 இடங்களி லும், அதிமுக வெறும் 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 180 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதிமுக 54 தொகுதிகளைப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். பெண்கள் வாக்கே &nbsp;வெற்றிக்கு அஸ்திவாரம் 2019 முதலே பெண்களின் வாக்கு கள் திமுகவுக்கு திரளத் தொடங்கி விட்டதாகவும், தற்போது 60 சதவீதத் திற்கும் அதிகமான பெண்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக வும் சுரேஷ்குமார் கூறினார். மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் &nbsp;பெண்களிடையே பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மாயத் தோற்றம்: தவெக தவெக என்பது ஒரு மாய உலகம் போன்றது என்று சுரேஷ்குமார் வர்ணித்தார். வேளச்சேரியில் மட்டும் &nbsp;அக்கட்சிக்கு 18 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம் என்றும், நகர்ப்புறங்களில் ஆங்காங்கே சற்று வாக்குகள் இருக்கும் என்றும், கிராமப் &nbsp;புறங்களில் 4 முதல் 5 சதவீதம் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரி வித்தார். சென்னையில் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள், தவெக பக்கம் நகர்வதே அதிமுகவிற்கு மிகப் பெரிய இழப்பாக அமையும் என்றும் &nbsp;கூறினார். கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பா ளர் அண்ணாமலை தோல்வியடை வார் என்று கடந்த தேர்தலில் தாங்கள் &nbsp;சரியாகவே கணித்தோம் என்றும் நினைவுபடுத்தினார். &nbsp;கடந்த தேர்தலில் பாஜக வென்ற &nbsp;4 தொகுதிகளில், தற்போது ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், வரும் தேர்தலில் சீமானும் விஜய்யும் தோல் வியடைவார்கள் என்றும், பெரம்பூ ரில் விஜய் போட்டியிட்டால் இரண்டாம் &nbsp;இடம்கூட பிடிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.