முந்தய பக்கம்

திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம்

4 Apr 2026, 4:02 pm
திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம்
<p><strong>திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம்</strong></p> <p>ஈரோடு, ஏப். 4- மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் செயல் &nbsp;வீரர்கள் கூட்டம் சனியன்று நடைபெற்றது. மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் &nbsp;காங்கேயம் தொகுதியில் அமைச்சர் மு.பெ.சாமிநா தன் திமுக சார்பில் போட்டியி டுகிறார். இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட சென்னி மலை ஒன்றியத்தில் கூட்டணி &nbsp;கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் அம்மன் காட்டேச் திருமண மாகாலில் நடை பெற்றது. வேட்பாளார் சாமி நாதன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர்கள் ஜி. பழனிச்சாமி, ஆர்.கோமதி உட்பட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக, தேர்தல் பணிமனையை வேட்பாளர் சாமிநாதன் முன்னிலையில், ஆர்.ரகுராமன் திறந்து வைத்தார். பவானிசாகர் - சுந்தரம் பவானிசாகர் (தனி) தொகுதியில் போட்டி யிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் பி.எல்.சுந்தரம் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக வடக்கு &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.நல்லசிவம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன், ஆதித்தமிழர் பேரவை பொன்னுசாமி, காங்கிரஸ் சிவகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். வீரபாண்டி - தருண் சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.கா.தருண் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நெய்க்காரப்பட்டியில் நடைபெற் றது. அமைச்சர் ரா.ராஜேந்திரன், எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி., டி.எம்.செல்வகணபதி &nbsp;எம்.பி., சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் எம்.கன கராஜ், தாலுகா செயலாளர் ஏ.சுந்தரம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram