ஒன்றிய அரசின் அலட்சியத்தால் எரிவாயு தட்டுப்பாடு இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
14 Mar 2026, 2:57 pm
<p><strong>ஒன்றிய அரசின் அலட்சியத்தால் எரிவாயு தட்டுப்பாடு இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 14 - தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் மறுக்கப்படுவதும், வளைகுடா போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் தமிழக மக்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் அதன் கூட்டணிக் கட்சி களையும் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இதில் கூட்டணி கட்சித் தலை வர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். காஞ்சிபுரத்தில் பெ.சண்முகம் கி.வீரமணி (தஞ்சாவூர்), கு. செல்வபெருந்தகை (சென்னை கிழக்கு), வைகோ (மதுரை), பெ. சண்முகம் (காஞ்சிபுரம்), மு.வீரபாண் டியன் (சென்னை வடக்கு பெரம்பூர்), அபுபக்கர் (சென்னை மேற்கு), தொல்.திருமாவளவன் (சென்னை தெற்கு), அருணாச்சலம் (சென்னை தென்கிழக்கு), எம்.எச்.ஜவா ஹிருல்லா (சென்னை மேற்கு), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கோவை), எல்.கே.சுதீஷ் (சென்னை மேற்கு), தி. வேல்முருகன் (சென்னை தெற்கு), சீதர் வாண்டையார் (சிதம்பரம்), தமி முன் அன்சாரி (சென்னை மேற்கு), உ.தனியரசு (திருப்பூர்), முபாரக் (சென்னை வடகிழக்கு-திருவொற்றி யூர்), கருணாஸ் (விருதுநகர்) ஆகிய மாவட்டங்களில் பங்கேற்கின்றனர். அமைச்சர்கள் கே.என்.நேரு (திருச்சி), ஐ. பெரியசாமி (திண்டுக்கல்), எ.வ. வேலு (திருவண்ணாமலை), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (கடலூர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (சாத்தூர்), தங்கம் தென்னரசு (விருதுநகர்), எஸ்.ரகுபதி (புதுக் கோட்டை), ஆ.முத்துசாமி (ஈரோடு), கே.ஆர்.பெரியகருப்பன் (சிவ கங்கை), தா.மோ.அன்பரசன் (செங்கல்பட்டு), மு.பெ.சாமிநாதன் (திருப்பூர்), அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் (திருச்செந்தூர்), ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (இராம நாதபுரம்), இரா.ராஜேந்திரன் (சேலம்), அர.சக்கரபாணி (ஒட்டன் சத்திரம்), ஆர்.காந்தி (ராணிப் பேட்டை), மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு), பி.மூர்த்தி (மதுரை), எஸ்.எஸ்.சிவசங்கர் (அரிய லூர்), பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு), கோவி.செழியன் (கும்ப கோணம்), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), சா.மு.நாசர் (திரு வள்ளூர்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பொன்மலை, திருச்சி), சிவ.வி.மெய்யநாதன் (அறந்தாங்கி), சி.வெ.கணேசன் (விருத்தாச்சலம்), டி.ஆர்.பி.ராஜா (திருவாரூர்), மா.மதிவேந்தன் (நாமக் கல்), த.மனோ தங்கராஜ் (கன்னி யாகுமரி), என்.கயல்விழி செல்வ ராஜ் (தாராபுரம்) ஆகிய இடங்களில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டின் நியாயமான கோரிக் கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் நட வடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரி விக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் அனைத்துக் கட்சி தொண்டர் களும் மக்களும் அனைத்து மாவட்டங் களிலும் திரளாக கலந்து கொள்ளு மாறு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.</p>
