தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

11 Nov 2025, 3:41 pm
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு  திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு &nbsp;திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.11 - &nbsp;வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத் தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கூட் டணி கட்சிகள் சார்பில் திருப்பூரில் மாபெரும் &nbsp;கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பு புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,வுமான க.செல்வராஜ் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் &nbsp;செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி யின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ் ணன், புறநகர் மாவட்டத் தலைவர் கோபி, மதி முக மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ், மக்கள் நீதி மையத்தின் மகேந்திரன், விடு தலை சிறுத்தை மாவட்டச் செயலாளர் மூர்த்தி &nbsp;உட்பட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட &nbsp;தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற் றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பாஜக வின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை குற்றம்சாட்டி, கைகளில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர். உடுமலைபேட்டை உடுமலையில், &nbsp;சிறப்பு வாக்காளர் திருத் தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள் ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட் சிகள் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு துவக்கத் தில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் &nbsp;தேர்தல் ஆணையமும், ஒன்றிய பாஜக அர சும் இணைந்து மோசடி செய்யும் வகையில் &nbsp;ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டித்து உடு மலை நகராட்சி அலுவலகத்தின் முன்பு &nbsp;கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக வைச் சேர்ந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு &nbsp;உறுப்பினர்கள் மதுசூதணன், கனகராஜ், &nbsp;திமுக நகரச் செயலாளர் வேலுசாமி, மாவட்ட &nbsp;அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். &nbsp;அதேபோல் தாராபுரத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.