தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக உரிமைகளைப் பாதுகாக்க திமுக அணி வெற்றிபெற வேண்டும்!

11 Apr 2026, 5:30 am
தமிழக உரிமைகளைப் பாதுகாக்க திமுக அணி வெற்றிபெற வேண்டும்!

தமிழக உரிமைகளைப் பாதுகாக்க திமுக அணி வெற்றிபெற வேண்டும்!

​தஞ்சாவூர், ஏப். 10 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில், திமுக வேட்பாளர் ஆர். வைத்திலிங்கத்தை ஆத ரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அவ சியம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். “தமிழகத்தில் நடைபெற விருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த விழிப்பு ணர்வுடன் வாக்களிக்க வேண்டும். அதிமுகவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அவர்களின் முது கில் சவாரி செய்து தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது.

எனவே, தமி ழகத்தின் உரிமைகளைப் பாது காக்க அதிமுக - பாஜக கூட்ட ணியை மக்கள் முறியடிக்க வேண் டும். திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாயம். பிரிவினைவாத சக்திகளைத் தமிழ் மண்ணிற்குள் நுழைய விட மாட்டோம் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதே வேளையில், தமிழக மக்களைத் திட்டமிட்டு திசைதிருப்பச் சிலர் முயன்று வருகின்றனர்.

குறிப்பாக, சினிமா நட்சத்திரம் என்கிற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளவர்களைப் பொது மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். ​தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்க உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து திமுக வேட்பா ளரை மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஒரத்தநாடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் என்.

சுரேஷ் குமார், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஆர். மனோகரன், என்.வி. கண்ணன், பி. செந்தில் குமார், சி. ஜெயபால், எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். வாசு, ஒரத்த நாடு சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எஸ். கோவிந்தராஜ், திரு வோணம் ஒன்றியச் செயலாளர் எஸ். பாஸ்கர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் செல்ல ரமேஷ் குமார், கார்த்திகேயன், நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் ஒன்றியப் பெருந்த லைவர் பார்வதி சிவசங்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வி சிவஞானம், விசிக நிர்வாகி அரங்க.குரு, திரா விடர் கழக நிர்வாகி செகநாதன், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முத்து. உத்திராபதி, ஒன்றியச் செயலாளர் இளைய ராஜா உள்ளிட்டோர் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.