தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையில் திமுக கூட்டணி தேர்தல் பணிகள் தீவிரம்

1 Apr 2026, 4:02 pm
சென்னையில் திமுக கூட்டணி தேர்தல் பணிகள் தீவிரம்

சென்னையில் திமுக கூட்டணி தேர்தல் பணிகள் தீவிரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். தொகுதி தேர்தல் பணிமனையை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், திமுக நிர்வாகிகள் மு.மகேஷ் குமார், எஸ்.குணசேகரன், பகுதிச் செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ் மற்றும் கே.மணிகண்டன் (சிபிஎம்), முத்தமிழ் (காங்.) ம.ஜேக்கப் (விசிக), ப.சுப்பிரமணி (மதிமுக), சிவா (சிபிஐ) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரை சந்தித்து ஆதரவு திரட்டினார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர்கள் ஆர்.கருணாநிதி, எஸ்.கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனத்தை சந்தித்து ஆதரவு திரட்டினார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் செயற்குழு உறுப்பினர் துளசி நாராயணன், எஸ்.ராணி, மாவட்டக் குழு உறுப்பினர் வீ.ஆனந்தன், பகுதிச் செயலாளர்கள் வி.கமலநாதன், டி.பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் மயிலை த.வேலு (மயிலாப்பூர்), ராஜா அன்பழகன் (தி.நகர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார். மேடையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.