தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெள்ளகோவில், காங்கேயத்தில் திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

5 Apr 2026, 5:18 pm
வெள்ளகோவில், காங்கேயத்தில் திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
<p><strong>வெள்ளகோவில், காங்கேயத்தில் திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்</strong></p> <p>திருப்பூர், ஏப். 5- காங்கேயம் சட்டமன்றத் &nbsp;தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதனை ஆத ரித்து, மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் தேர் தல் ஆலோசனைக் கூட்டங் கள் வெள்ளகோவில் மற் றும் காங்கேயத்தில் சனிக் கிழமை நடைபெற்றன. இந்த &nbsp;இரு கூட்டங்களிலும் திமுக மாவட்டச் செயலாளர் இல. பத்மநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். காங்கேயம் தேர்தல் பணிமனையில் நடை பெற்ற கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றியச் &nbsp;செயலாளர் கே.கே. சிவானந்தன் தலைமை &nbsp;தாங்கினார். அவைத் தலைவர் என். ராஜேந்தி ரன் வரவேற்றார். இதில் படியூர் ஊராட்சித் தலைவர் முத்துராமன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.சி.சி. மணிவண்ணன், மதிமுக &nbsp;செயலாளர்கள் ப. மணி (தெற்கு), தாமரைக் கண்ணன் (வடக்கு), விசிக மாவட்டச் செயலா ளர் இரா. ஜான், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் &nbsp;செயலாளர் முத்துமணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம். ராஜேந் திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளகோவில் திமுக ஒன்றிய அலுவ லகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியச் &nbsp;செயலாளர் கே. சந்திரசேகரன் தலைமை தாங்க, நகரச் செயலாளர் சபரி முருகானந் தம் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி வரவேற்றார். விசிக ஒன்றிய துணைச் செயலாளர் ஜான், மதிமுக &nbsp;ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, தேமுதிக கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர். இந்த இரு கூட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் இரா. &nbsp;செல்வராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர் வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பலத்தை பறைசாற்றும் வகையில், வேட்பா ளர் மு.பெ. சாமிநாதனுக்குத் தொகுதி முழு வதும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடு படுவது என்றும், அவரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்றும் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக் கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.