மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பழைய முகங்களுடன் புதியவர்களும் களம் காண்கிறார்கள்
29 Mar 2026, 3:34 pm
<p><strong>மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பழைய முகங்களுடன் புதியவர்களும் களம் காண்கிறார்கள்</strong></p>
<p>மதுரை, மார்ச் 29- மதுரையில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளுக்கு வேட்பா ளர்கள் பின்வருமாறு அறி விக்கப்பட்டுள்ளனர்: திருமங்கலம் – பி.டி. மணி மாறன்; திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி யன்; மதுரை மேற்கு – ரகு பாலாஜி; மதுரை மத்திய – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்; மதுரை வடக்கு – கோ.தளபதி, சோழ வந்தான் – வெங்கடேசன் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சர்களான பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் மற்றும் பி.மூர்த்தி தாங்கள் ஏற்கனவே போட்டி யிட்ட தொகுதிகளில் மூன்றா வது முறையாகவும், கோ. தளபதி மற்றும் ஆ.வெங்க டேசன் ஆகியோர் தங்களது தொகுதிகளில் இரண்டாவது முறையாகவும் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதேவேளை, திருப்ப ரங்குன்றம் மற்றும் மதுரை மேற்கு தொகுதிகளில் புதிய முகங்களாக கிருத்திகா தங்கபாண்டியன் மற்றும் ரகு பாலாஜி ஆகியோர் அறி முகப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், உசிலம்பட்டி, மேலூர், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பா ளர்கள் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், அனுபவ முள்ள தலைவர்களையும் புதிய முகங்களையும் இணைத்து திமுக கூட்டணி தனது தேர்தல் தயாரிப்பை வலுப்படுத்தியுள்ளது குறிப் பிடத்தக்கது.</p>
