121 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடி மோதல்
29 Mar 2026, 3:34 pm
<p><strong>121 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடி மோதல்</strong></p>
<p>சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சி களுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 121 தொகுதிகளில் திமுகவும் அதிமுக வும் நேரடியாக மோதுகின்றன. சென்னை மண்டலத்தில் கொளத்தூ ரில் மு.க.ஸ்டாலினுக்கு (திமுக) எதிராக சந்தான கிருஷ்ணன் (அதிமுக), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு (திமுக) எதிராக ஆதிராஜாராம் (அதிமுக), ஆயிரம் விளக்கில் எழிலன் நாகநாதனுக்கு (திமுக) எதிராக பி.வளர்மதி (அதிமுக), அண்ணா நகரில் எம்.கே.மோகனுக்கு (திமுக) எதிராக கோகுல இந்திரா (அதிமுக), ராயபுரத்தில் டாக்டர் சுபைர் கானுக்கு (திமுக) எதிராக டி.ஜெயக் குமார் (அதிமுக) என கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர பெரம்பூர், வில்லி வாக்கம், திருவொற்றியூர், மதுர வாயல், மாதவரம் ஆகிய தொகுதிகளி லும் இரு திராவிடக் கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி யில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு (அதிமுக) எதிராக சி.காசி (திமுக), கோவை தெற்கில் வி.செந்தில்பாலா ஜிக்கு (திமுக) எதிராக அம்மன் அர்ஜு னன் (அதிமுக) என மோதல் நிலவு கிறது. தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணி (அதிமுக), நாமக்கல், கரூர், அந்தியூர், ஓமலூர் தொகுதிகளி லும் நேரடி மல்லுக்கட்டு நடக்கவுள்ளது. தென் தமிழகத்தில் மதுரை கிழக்கில் பி.மூர்த்திக்கு (திமுக) எதிராக மாங்குளம் கே.மகேந்திரன் (அதிமுக), திருமங்கலத்தில் சேடப்பட்டி மணி மாறனுக்கு (திமுக) எதிராக ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) என போட்டி நிலவுகிறது. ஆண்டிப்பட்டி தொகுதி யில் திமுக வேட்பாளர் ஏ.மகாராஜ னுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன் என சகோதரர்களுக் கிடையே மோதல் நிகழவுள்ளது குறிப் பிடத்தக்கது. வட தமிழகத்தில் காட்பாடியில் துரைமுருகன் (திமுக), விராலி மலையில் சி.விஜயபாஸ்கர் (அதிமுக), ஆத்தூர், திண்டுக்கல் உட்பட பல தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடி யாக மோதுகின்றன.</p>
