குதிரை பேரம் நடத்துவதாக தவெக மீது திமுக, அதிமுக புகார்
4 Jul 2026, 9:21 pm
<p><strong>குதிரை பேரம் நடத்துவதாக தவெக மீது திமுக, அதிமுக புகார்</strong></p><p>சென்னை, ஜூலை 4 - சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை திமுக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ். பாரதி, சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகி கள் சந்தித்தனர். தவெக அரசு வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாகவும், முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆளுநரிடம் திமுக நிர்வாகி கள் புகார் அளித்தனர். நாகர்கோவில் எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அமைச்சர் பதவியும், வேப்பனஹள்ளி எம்எல்ஏ சீனிவாசனுக்கு ரூ. 50 கோடி யும் தருவதாக தவெக தரப்பில் பேச்சு நடந்ததாகவும், ஓ.எஸ். மணியனிடமும் பேரம் பேசப்பட்டதாகவும், ஆளுநரிடம் புகார் அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அல்லாத ஜான் ஆரோக்யசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு, அதிகாரி களுக்கு உத்தரவிடும் அளவிற்கு செயல்படு வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இவை தொடர்பாகவும், வைகோ தனது கட்சி பொதுக்குழுவில் பேசியதை சுட்டிக் காட்டியும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்தும் தவெக அரசு மீது நடவ டிக்கை எடுக்குமாறு திமுக சார்பில் கோரப் பட்டுள்ளது. திமுக மனு அளிப்பதற்கு முன்னதாக, அதிமுக சார்பிலும் குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் அளிக்கப்பட்டது. அதிமுக. எம்எல்ஏ-க்கள் பதவி விலகியது குதிரை பேரம் காரணமாகவே எனவும், இடைத்தேர்தலில் பதவி விலகியவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடக் கூடாது எனவும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக எம்.பி. இன்ப துரை ஆகியோர் மனு அளித்தனர். முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், ஆளுநரைச் சந்தித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் ஒரு பெண் குழந்தை யிடம் முறையின்றி நடந்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசா ரணை நடத்தக் கோரி மனு அளித்திருந்தார். தவெக அரசுக்கு எதிராக ஒரே நாளில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்தி ருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
