திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்
7 Apr 2026, 5:42 pm
<p><strong>திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்</strong></p>
<p>திருப்பூர், ஏப்.7- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்ட மன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் திங்க ளன்று காங்கேயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய் தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் இல. பத்மநாதன், காங்கிரஸ் கட்சியின் வழக்கறி ஞர் மணி, திமுக மாவட்ட துணைச்செயலா ளர் ராசி முத்துக்குமார், வழக்கறிஞர் வி.முரு கேசன் ஆகியோர் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திராணி, தேர்தல் நடத் தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ், திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், நகரச் செயலா ளர் முருகானந்தம், காங்கிரஸ் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காளிமுத்து, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.வி.செந் தில்குமார், கே.கே. துரைசாமி, இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்ட கூட் டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
