மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கோரிய தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்
9 Apr 2026, 5:30 am

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கோரிய தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்

விருதுநகர், ஏப்.8- விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான எம்.ஆர்.வி நினைவகத்திற்கு தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் நேரில் வந்து ஆதரவு கோரினார்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் சிபிஎம் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிபிஎம் நகர செயலாளர் எம்.ஜெயபாரத் தலைமையில், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. ராஜேந்திரன் முன்னிலையில் வேட்பாளர் விஜயபிரபாகரன் அனைவரிடமும் வாக்கு சேகரித்ததோடு தன்னை வெற்றி பெறச் செய்திட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, வேட்பாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, விஜயபிரபாகரன் வெற்றி பெற மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம், தெருமுனைப் பிரசாரங்கள், வீதிதோறும் வாக்குச் சேகரிப்பு பணிகள் ஆகியவை அனைத்து கிளை மட்டங்களிலும் நடைபெறும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகன், மூத்த தோழர் எஸ்.பாலசுப்பிரமணியன், தேமுதிக மாவட்டச் செயலாளர் காஜா ஷெரிப், நகரச் செயலாளர் ஏ.கலஸ், திமுக மாவட்ட இணை செயலாளர் ராஜகுரு, நகர மன்ற தலைவர் மாதவன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி. வேலுச்சாமி, பி.பாண்டி, எம்.சுப்புராம் உட்பட பலர் பங்கேற்றனர்.