கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றார்
3 Jun 2026, 8:52 pm
<p><strong>கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றார்</strong></p><p>பெங்களூரு, ஜூன் 3 - கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார், புதன்கிழ மை (ஜூன் 3) அன்று பதவியேற்றுக் கொண்டார். சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜி னாமா செய்ததைத் தொட ர்ந்து, துணை முதல்வராக இருந்த டி.கே. சிவகுமார், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சார்பில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் புதனன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.கே. சிவகுமா ருக்கு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜி. பரமேஸ்வர் துணை முதல்வராகவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங்க் கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திர சித்த ராமையா உள்ளிட்ட 13 பேர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
