தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.க. ஆர்ப்பாட்டம் கி. வீரமணி கண்டன உரை

16 May 2026, 10:41 pm
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.க. ஆர்ப்பாட்டம் கி. வீரமணி கண்டன உரை

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.க. ஆர்ப்பாட்டம் கி. வீரமணி கண்டன உரை

சென்னை, மே 16 - நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் சனிக்கிழமையன்று (மே 16) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனொரு பகுதியாக, சென்னை யில் நடைபெற்ற தி.க. துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங்குன்றன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி வரவேற்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை யாற்றினார்.

விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமா வளவன் எம்பி., திமுக செய்தி தொடர் பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி. செல்வா, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலா ளர் ஆவடி அந்திரிதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளா ளர் எஸ்.எஸ்.பாலாஜி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு முஸ்லீம் லீக் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாரு தீன், எஸ்.டி.பி.அய். மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலா ளர் எஸ்.கே.சிவா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். திக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.