அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் தீபாவளி அமையட்டும்!
4 Nov 2026, 10:52 pm

அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் தீபாவளி அமையட்டும்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் டிக்கு ஒருமுறை பட்டாசு வெடித்தும், மத்தாப்பு ஒளியில் மகிழ்ந்தும் கொண் டாடும் பண்டிகைதீபாவளி. ஆனால், இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான பட்டாசுகளைத் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டும் ஆண்டு முழுவதும் ஆபத்தும், அச்சமும் நிறைந்ததாகவே உள்ளது.

மக்களின் மகிழ்ச்சிக்காகப் பல வண் ணங்களில் பட்டாசுகளைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் நிரந்தரமாகஇல்லை. குடும்பச் சூழல் காரணமாக ஏராளமானோர் பீஸ் ரேட் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றிப் பணியாற்றி வருகின்றனர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் கிடைக்காததால் குடும்பப் பாரத்தைச் சுமக்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஆலைக்குள் நுழைந்தது முதல் விபத்து அச்சத்துடன் பணியாற்றும் தொழிலாளர்கள், அன்றைய வேலை முடிந்து உயிருடன் வீடு திரும்பிய பிறகேநிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். பட் டாசு வெடிக்கும் ஒலியைவிட, விபத்துகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளும், குடும்பத்தினரின் மரண ஓலங்களும் அதிக வலியை ஏற்படுத்துகின்றன.விபத்து நடந்த சில நாட்களிலேயே வாழ்வாதாரத்துக்காக வேறு வழியின்றி மீண்டும் அதே ஆலைக்குச் சென்று பணியாற்றும் நிலைக்கு பெண் தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்.

தற்போது பட்டாசுத் தொழிலில் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் என மொத்தம் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இத் தொழில் விளங்குகிறது. ஆனால், வெடித் துச் சிதறும் பட்டாசின் ஒளியைப் போலவே தொழிலாளர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி சிறிது நேரமே நீடிக்கிறது என்பதே உண்மை.

எனவே, பட்டாசுத் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த, அனைத்து தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும். அனைவருக்கும்வருங்கால வைப்பு நிதி (பி.எப்.), தொழிலாளர் காப் பீட்டுத் திட்டம் (இ.எஸ்.ஐ.) ஆகியவற் றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கடந்த 31 ஆண்டுகளாக ஆலை நிர்வாகங்கள் 20 சதவீத போனஸ் மட்டுமே வழங்கி வருகின்றன. பட்டாசுத் தொழிலில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் 50 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப் பீட்டை வழங்க வேண்டும்.மேலும், பட்டாசுத் தொழிலாளர் களுக்கான குறைந்தபட்சக் கூலி உயர்வு தொடர்பான அரசாணை எண்கள் 45, 46-ஐ ஆலை நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க முறையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களைக் கொண்டு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. ஆலை நிர்வாகங்களும், அரசும் இக்கோரிக்கைகளை நடைமுறைப் படுத்தினால் பட்டாசுத் தொழிலையும்,அதனை நம்பியுள்ள தொழிலா

ளர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகாலத்துக்குப் பாதுகாக்க முடியும்.பட்டாசுத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் எவ்வித அச்சமுமின்றி மகிழ்ச்சியுடன் கொண் டாடும் நாளே உண்மையான தீபாவளியாக அமையும். அதற்கான மாற்றத்தை உருவாக்குவோம்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

- இரா.சுரேஸ்குமார் சிபிஐ(எம்) மாநகர் செயலாளர், சிவகாசி