தீபாவளி சிறப்பு: சென்னையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
4 Nov 2026, 5:58 pm

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நவம்பர் 6-ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களின் கால அட்டவணை:

தாம்பரம் – மானாமதுரை: நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

தாம்பரம் – திருச்சி: நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

மானாமதுரை – தாம்பரம்: நவம்பர் 7 (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும்.

பண்டிகைக் காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.