கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
4 Nov 2026, 12:23 am

தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம், நவ.3-தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க, பெங்களூருவிலிருந்து சேலம் வழியாக தூத்துக்குடி, கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.பெங்களூரு கன்டோன்மென்ட்–தூத்துக்குடி சிறப்பு ரயில்(06533) நவம்பர் 6-ஆம் தேதி இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்குத் தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்க ரயில் (06534) நவம்பர் 7-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இவை ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். எஸ்.எம்.வி.டி. பெங்களூரு–கண்ணூர் சிறப்பு ரயில் (06545) நவம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 12.05 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்க ரயில் (06546) அன்று மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

பயிர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல்

உதகை, நவ.3-உதகையில், பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள இந்திய மண்மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவனத்தின், ஆராய்ச்சி மையம் சார்பில் தீட்டுக்கல் கிராமத்தில் விவசாய நிலங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆராய்ச்சி மைய தலைவரும், முதன்மை விஞ்ஞானியுமான சோமசுந்தரம் கூறுகையில், பயிர்களின் தேவைகள் மற்றும் மண்ணின் வளநிலைக்கு ஏற்ப, உரங்களை உரிய அளவில் மற்றும் குறிப்பிட்டஇடத்திற்கேற்ற வகையில் பயன்படுத்த வேண்டும்.

மேலும், மண்ணின் வளத்தையும் ஆரோக்கியத்தையும் நிலைநிறுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கும் தொழு உரங்கள், பயிர்க் கழிவுகள், உயிர் உரங்கள் மற்றும் ரசாயன உரங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (INM) முறையின் கொள்கைகள் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும், என்றார். இந்நிகழ்வில், விஞ்ஞானி பிரபாவதி, சுந்தராம்பாள், சங்கர், ஹொம்பேகவுடா, வனிதா, ஆன்னேபு, ஷீட்டல், ரஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உரிமமின்றி விதைகள் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!

உதகை, நவ.3-உரிமமின்றி விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூடலூர்

வட்டாரப் பகுதிகளில் தற்பொழுது பாகற்காய் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான பாகற்காய் விதைகள் விதை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே விற்க வேண்டும். விற்

பனைக்கு வைக்கப்படும் பாகற்காய் விதைகளுக்கு முளைப்புச் சான்று, பதிவுச் சான்று, கொள்முதல் பட்டியல் விற்

பனையின் பொழுது வைக்க வேண்டும். கட்டாயம் விவசாயிகளுக்கு பாகற்காய் விதைகளை விற்கும்பொழுது விற்பனை ரசீது வழங்க வேண்டும். விற்பனை கடைகளில் இருப்பு விபர பலகையில் தினசரி விதைகளின் அளவு, விலை குறித்து குறிப்பிட வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் விதைகளை வாங்க வேண்டாம். இடைத்தரகர்கள் யாரேனும் விதை சட்டத்திற்கு புறம்பாக விதைகளை விற்றால் உடனே விதை ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுக்கவும். விவசாயிகளுக்கு விதை உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்வதுவிதை கட்டுப்பாட்டு ஆணை 1983ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாயிகள் பாகற்காய் சாகுபடி குறித்த

தொழில் நுட்பங்களை உதகையில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். விற்பனையாளர் விதைகள் விற்கும் பொழுது, விதைச்சட்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து விவசாயிகளுக்கு தரமான விதைகளை மட்டுமே விற்க வேண்டும். விதி முறைகள் கடைபிடிக்காத விற்பனையாளர்களின் விதை உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்!

நாமக்கல், நவ.3-நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மெயின் ரோடு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, விபத்து அபாயம் நிலவுகிறது.

சேலம் – திருச்செங்கோடு பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும்ஹோட்டல்கள், தேநீர் கடைகள், மளிகைக் கடைகள் செயல்

பட்டு வருகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் காலை, மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள் முதல்கனரக வாகனங்கள் வரை சாலையிலேயே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.

மேலும், கடைகளின் விளம்பரப் பலகைகள் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்ல போதிய இடமில்லை. பள்ளி, கல்லூரி வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவிகள் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐஸ்பெர்க் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, நவ.3-நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளான சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரொக்கோலி உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டுள்ளனர். மலை காய்கறிகளின் கொள்முதல் விலை நிலையின்றி ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால்,விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஐஸ்பெர்க் பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஐஸ்பெர்க் பயிரிட்டு அறுவடை செய்ய 70 நாட்கள் தேவைப்படும். கொள்முதல் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலையான குறைந்தபட்சகொள்முதல் விலையை நிர்ணயித்து வழங்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி தனியாரிடம் இருந்து விதைகள் வாங்காமல் ஏராளமான விவசாயிகள் சொந்தமாக விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக ஐஸ்பெர்க் கொள்முதல் விலை கிலோ ரூ.80 வரை இருந்தது. தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.220க்கு கொள்முதல் செய்யப்படுகிறது, என்றார்.