தீபாவளி விற்பனை: தி.நகர், புரசையில் மக்கள் அலைமோதல்
1 Nov 2026, 11:42 pm
<p><strong>தீபாவளி விற்பனை: தி.நகர், புரசையில் மக்கள் அலைமோதல் </strong></p><p>சென்னை, நவ. 1-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க சென்னை தி.நகர், பாரிமுனை (என்.எஸ்.சி. போஸ் சாலை), வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு), புரசைவாக்கம் உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் பொதுமக்கள் பெருந்திரளாகக் குவிந்தனர்.</p><p>அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், வார விடுமுறை நாளானஞாயிறு காலை முதலே பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகவந்து ஜீன்ஸ், சேலை, வேட்டி, சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். தி.நகர் ரங்கநாதன் தெரு, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ்சாலை, வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு, புரசைவாக்கம் ஆகிய கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் மாநகர்முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5இடங்கள் உட்பட முக்கிய வணிகப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒலிபெருக்கி மூலம் மகளிர்மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளையும் போலீசார் தொடர்ந்து வழங்கிவருகின்றனர்.</p>
