தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள் திருப்புவனம், மேலப்பாளையம், வாடிப்பட்டியில் ரூ. 7 கோடிக்கு விற்பனை

1 hour before
தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்  திருப்புவனம், மேலப்பாளையம், வாடிப்பட்டியில் ரூ. 7 கோடிக்கு விற்பனை
<p><strong>தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள் திருப்புவனம், மேலப்பாளையம், வாடிப்பட்டியில் ரூ. 7 கோடிக்கு விற்பனை</strong></p><p>திருப்புவனம், நவ.3-தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆடு, கோழி விற்பனை தொடர்பான சந்தைகள் விற்பனையில் களைகட்டியுள்ளது.</p><p>மேலப்பாளையம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் (திருநெல்வேலி) சந்தையில் செவ்வாய்கிழமை ஆடுகளை வாங்கிச் செல்ல திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டவியாபாரிகள் மட்டுமல்லாது, தேனி, மதுரை, கேரள வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். இந்த சந்தையில் வேலி ஆடு என அழைக்கப்படும் ஒருவகை ஆடு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விற்பனை ஆனது என செய்திகள் வெளியாகின. மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்கிழமை வாரச் சந்தையில் அதிகாலை முதல் காலை 8 மணி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின. சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே வாரச்சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி ஆடு, மாடு கோழிகளும் விற்கப்படுவது வழக்கம். வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்மக்கள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். வாடிப்பட்டி வாரச்சந்தையில் ஒரு கோடிரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை யானதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.