தீபாவளி பண்டிகை : களைகட்டிய மலேசியா
26 minutes before

தீபாவளி பண்டிகை : களைகட்டிய மலேசியா

கோலாலம்பூர், நவ. 7-இந்தியர்கள் குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது.

பினாங்கிலுள்ள லிட்டில் இந்தியா, ஜாலான் மஸ்ஜித் இந்தியா பஜார், பாங்சார் ஷாப்பிங் சென்டர், சூரியா கேஎல்சிசி மால், பேராக் குளோபல் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற இடங்கள் அக்டோபர் மாத இறுதி வாரம் முதலே தீபாவளி கொண்டாட்டங்களால் விழாக்கோலம் பூண்டது. இந்திய மக்கள் மட்டுமின்றி மலேசிய மக்களும் தீபாவளி சந்தையில், விழாக்களில் உற்சாகமாக பங்கேற்றனர். இதனால் மலேசியா நாட்டின் முக்கிய சந்தைகள், ஷாப்பிங் மால்கள் சிறப்பு விற்பனையில் ஜொலித்தன. மேலும் மலேசியாவின் பல்வேறு நகரங்களில் தீபாவளி தினத்தன்று சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்காக எந்த அனுமதி கட்டணமும் இல்லை. தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.