நலவாரியத்தில் பதிவு செய்ய அனைவருக்கும் தீபாவளி போனஸ் ரூ.5,000 வழங்கிடுக!
4 Oct 2026, 9:00 pm

நலவாரியத்தில் பதிவு செய்ய அனைவருக்கும் தீபாவளி போனஸ் ரூ.5,000 வழங்கிடுக!

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மாநாடு கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.4-விருதுநகர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தின் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மாநாடு, சிஐடியு அலுவலகத்தில் நகரத் தலைவர் சுருளிராஜன் தலைமையில் நடைபெற்றது. நகர துணைத் தலை வர் மாரியப்பன் வரவேற் றார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா பேசினார். சாலைப் போக்குவரத்து சிஐடியு சங்க விருதுநகர் மாவட்டச் செயலாளர் திருமலை, சிஐடியு மாவட் டத் துணைச் செயலாளர் சந் தனம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாநாட்டை நிறைவு செய்து கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமர் பேசினார்.

இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தலைவராக ஏ.மாரியப்பன், செயலாளராக எஸ்.வீரசதானந்தம், பொருளாளராக சி.தங்கக்கொடி உள்ளிட்ட 25 பேர் கொண்ட நகரக் குழு தேர்வு செய் யப்பட்டது.மாநாட்டில், நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அனைத்து பட்டப் படிப்புகளுக்கும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; கடந்த 5 ஆண்டுகளாகவழங்கப்படாத பாதுகாப்பு உபகரணங்களை இந்த ஆண்டு வழங்க வேண்டும்;

நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்டுமானத் துக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; வீடற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இடம் வழங்கி இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.