திருச்சி விரைவு செய்திகள்
18 Dec 2025, 4:38 pm

பிரிவு உபச்சார விழா

பாபநாசம், டிச.18 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஊராட்சிச் செயலராக பணியாற்றிய முருகையன் பணிமாறுதலில் செல்வதால், அவருக்கான பிரிவு உபச்சார விழா புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்ராஜ், ஆடலரசு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராஜராஜன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கணேசன், இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வீரமாங்குடி ஊராட்சிச் செயலர் கலையரசன், புத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உதவிஆசிரியர் சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம உதவியாளர் கீதா, சத்துணவு பணியாளர்கள், ஊராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஊராட்சிச் செயலர் முருகையன் நன்றி கூறினார்.

டிச.23 பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட (பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம்) விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 23.12.2025 (செவ்வாய்கிழமை) அன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என கோட்டாட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.