தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீண்டும் அயோத்தியை வைத்து அடிப்படைப் பிரச்சனைகள் திசை திருப்பல்!

13 Dec 2025, 5:13 pm
மீண்டும் அயோத்தியை வைத்து அடிப்படைப் பிரச்சனைகள் திசை திருப்பல்!
<p><strong>மீண்டும் அயோத்தியை வைத்து அடிப்படைப் பிரச்சனைகள் திசை திருப்பல்!</strong></p> <p>ராமர் மற்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டிருப்பது, பாஜக விற்கு மிகவும் பலனளித்த பிரச்சார மாக இருந்ததுடன், அதனை அரசியல் மேலா திக்க நிலைக்கும் உயர்த்தியுள்ளது. பலரால் போற் றப்படும் மற்றும் தெய்வீகத் தன்மை கொண்டவரா கக் கருதப்படும் ராமர், துளசிதாசரின் ராமசரிதமான ஸின் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து குடும்பங்களிடையே ஆழமாகப் பதிந்துள்ள &nbsp;புராணக்கதைகளின் ஒரு பகுதியாக இருக்கிறார். இந்தியப் புராணங்களில் உள்ள இரண்டு இதிகா சங்களில் ஒன்றான ராமாயணத்தில் வர்ணிக்கப் பட்டுள்ள மரியாதா புருஷோத்தமனான ராமரின் இந்தத் தெய்வத்தன்மை குறித்து நாம் எந்த முரண்பாட்டையும் கொண்டிருக்க முடியாது. மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறை கள் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. தேசத்தின் முக்கியத்துவத்தை &nbsp;மாற்றி எழுதும் முயற்சி... ஆனால், இவ்வாறான நம்பிக்கையை அரசிய லுடனும் ஆட்சியுடனும் ஒருங்கிணைக்க முயற்சிக் கும்போதுதான் அது முக்கியப் பிரச்சனையாக மாறுகிறது. புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலில் நவம்பர் 25 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி, அந்தச் செயல்முறையை மேலும் வலுப்படுத்துவதற்காகப் புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படுவதைக் கண்டது. கோவிலின் உச்சியில் &lsquo;தர்மக் கொடி&rsquo; ஏற்றப்பட்ட அந்த நிகழ்ச்சி, நாட்டின் கடந்த காலம், &nbsp;நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் அடையா ளமாகப் பறைசாற்றப்பட்டது. ஒன்றிய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. மற்ற தேர்தல் செயல்முறைகளி லும், பாஜக பல மாநில அரசுகளையும் நாட்டின் பெரும்பாலான அரசமைப்புச் சட்டத்தின்கீழான அமைப்புகளையும் கைப்பற்றி, தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. குடியரசுத் தலை வர், குடியரசு துணைத் தலைவர், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், அத்துடன் நீதித்துறைச் செயல்முறையின் முக்கிய அம்சங்கள் ஆகிய அனைத்தும் இந்திய தேசத்தின் முக்கியத்துவத்தை மாற்றி எழுதுவதற்காகப் பயன்படுத்தப்படும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. போராட்ட சரித்திரத்தை &nbsp;புராணக் கதைக்குள் சுருக்க... துவஜாரோஹண விழாவின் போது பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் உரைகளை உன்னிப்பாக ஆராய்ந்தால், நமது சுதந்திரப் போராட்டம் உட்பட நமது முழு கடந்த காலத்தையும் ராமரின் புராணக் கதைக்குள் சுருக்கிவிடும் ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவா கும். மோடி, &ldquo;இன்று, ஸ்ரீ ராமபிரானின் பிறந்த இடத்தின் எல்லையற்ற ஆற்றலும், ஸ்ரீ ராமரின் குடும்பத்தின் தெய்வீகப் பெருமையும் இந்த மகா புனிதமான மற்றும் பிரம்மாண்டமான கோவிலில் &nbsp;தர்மக் கொடியின் வடிவில் நிலைநிறுத்தப்பட்டுள் ளது&rdquo; என்றும், &ldquo;இந்த தர்மக் கொடி வெறும் கொடி &nbsp;அல்ல. இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சி யின் கொடியாகும். அதன் காவி நிறம், அதில் சித்தரிக்கப்பட்டுள்ள சூரிய வம்சத்தின் பெருமை, பொறிக்கப்பட்டுள்ள ஓம் சின்னம், மற்றும் செதுக் கப்பட்டுள்ள கோவிதார மரம் ஆகியவை ராமராஜ் யத்தின் பெருமையைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் கொடி ஒரு சங்கல்பம். இந்தக் கொடி வெற்றி. இந்தக் கொடி போராட்டத்திலிருந்து உருவான படைப்பின் கதை&rdquo; என்று கூறினார். முக்கியமற்றதாக்கப்படும் &nbsp;பன்முகத்தன்மை, ஒற்றுமை இந்தியாவின் தேசிய அடையாளத்தை ராமரின் தெய்வீக ஆளுமைக்குள் அடக்கிவிடும் முயற்சியே இது என்பது தெளிவாகிறது. இந்திய மக்களின் பன்முகத்தன்மை, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தி ற்கு எதிரான போராட்டக் களத்தில் உருவாக்கப்பட்ட அவர்களின் ஒற்றுமை அனைத்தும் முக்கிய மற்றவையாக ஆக்கப்படுகின்றன. கண்ணிய மான வாழ்வாதாரத்திற்காகவும், உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை யும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியா வசியத் தேவைகளைப் பெறுவதற்காகவும், உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்பதற்காகவும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும், இந்தத் தெய்வமாக்கும் செயல்முறைக்கு முன்னால் முக்கியமற்றவையாகி விடுகின்றன. ஓராண்டுக்கு முன்பு அயோத்தியில் நடைபெற்ற திறப்பு விழா மற்றும் அதைச் சுற்றிய விவாதங்க ளை நாம் நினைவுகூரலாம். அப்போது சில சங்க ராச்சாரியார்கள், பிரதமர் மையப் பாத்திரத்தை ஆக்கிரமித்ததற்கும், அரசியல் மதத்தின் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்ததற்கும் எதிராகத் தங்கள் கடுமையான ஆட்சேபணைகளைத் தெரி வித்திருந்தனர். இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும், மதமும் அரசியலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி யைப் பேணுகின்றன. மக்களாட்சிகள் மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் செழித்து வளர் கின்றன. தெய்வீகம் குறித்த கேள்விக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த நாட்டில் பல நம்பிக்கைகளும் மதங்களும் உள்ளன. தெய்வீகத்திற்கும் பொது ஆட்சிக்கும் இடையே இந்த வெளிப்படையான இணக்கத்தால் அவை அனைத்தும் சமமாக ஈர்க்கப்படாமல் இருக்க லாம். அரசியல் கட்சிகள், மக்களின் வர்க்கம், சாதி, இனம், மதம் போன்றவற்றைப் பொருட்படுத்தா மல், மக்களின் நலனுக்காக உறுதியான கொள்கை வழிகாட்டுதல்களையும் குறிப்பிட்ட நடவடிக்கை களையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளன. பொறுப்புக் கூறும் கொள்கை அந்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்படுவதை உறுதி செய்கிறது, மேலும் அரசாங்கங் கள் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட அனு பவத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. வறுமை, துயரம், ஆதரவற்ற நிலையை இந்த கொடி எப்படி ஒழிக்கும்? எனினும், அயோத்தியில் பிரதமர் ஆற்றிய உரையின் தொனியைப் பார்க்கும்போது, அந்த ஆய்வுக்கு முகம் கொடுப்பதற்கு அவர்கள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. அவர் வெளிப்படையாக, &ldquo;இந்த தர்மக் கொடி நம்மை ஒரு சபதம் எடுக்க வைக்கும் - &nbsp;வறுமையற்ற, யாரும் துயரப்படவோ அல்லது ஆதரவற்றவர்களாகவோ இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்குவோம்&rdquo; என்று கூறினார். வறுமை, துயரம் அல்லது ஆதரவற்ற நிலையை எவ்வாறு நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்பதைப் பிரதமர் விளக்க வேண்டியது அவசி யமாகும். நிச்சயமாக, ராமரையும் தர்மக் கொடி யையும் புகழ்வதால் மட்டும் அதைச் சாதித்துவிட முடியாது. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, வறுமை மற்றும் வேலையின்மைக்கு மத்தியில், இத்தகைய இலக்கை எவ்வாறு அடைய முடியும் என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும். பிரதமர் மோடி, 1835இல் தாமஸ் மெக்காலே வால் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டார். மெக்காலேயின் காலனித்துவக் கல்வி பற்றிய கருத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தின் விளைவாக இருந்தது. அதை ஒழிக்க வேண்டுமானால், ஆங்கிலேயர்கள் தோற் கடிக்கப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தர்மத்வஜாரோஹண விழாவை &ldquo;அளப்பரிய வரலாற்று, உணர்ச்சி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தருணம்&rdquo; என்று வர்ணிப்பதில் சமமாகவே சாமர்த்தியமாக இருந்தார். எனினும், பாஜகவிற்கும், குறிப்பாக பிரதமர் மோடிக்கும் உந்து சக்தியாக இருந்து வரும் ஆர்எஸ்எஸ், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, ஒரு சுதந்திரமான, முற்போக்கான இந்தி யாவை நிறுவுவதற்கும், அதன் மூலம் &ldquo;வறுமை, துயரம் மற்றும் கையறுநிலை&rdquo; ஆகியவற்றை ஒழிக்கும் இந்த இலக்குகளை அடைவதற்கும் எவ்வாறு பங்களித்தது என்பது குறித்து எதுவுமே கூறவில்லை. காந்தியின் கருத்தை கடுமையாகத் தாக்கிய மோகன் பகவத் உண்மையில், நாக்பூரில் அவர் சமீபத்தில் ஆற்றிய உரைகளில் ஒன்றில், மோகன் பகவத், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காந்தி தனது &lsquo;ஹிந்த் ஸ்வராஜ்&rsquo; நூலில் கூறிய கருத்துக்களுக்காக அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அந்த நூலில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிரந்தரமான பகை மை எதுவும் இல்லை என்று காந்தி சுட்டிக்காட்டியி ருந்தார். அத்தகைய வேறுபாடுகள் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் விரும்பியதாலேயே நிலவின என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், ஆங்கிலே யர்களுக்கு எதிரான போராட்டம் இந்த இரு சமூ கங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கியது. தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திரம் அடைந்ததிலும் தனது அமைப்பிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் கூறமுடியாத நிலையில் உள்ள ஆர்எஸ்எஸ், இந்தியா 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடையவில்லை, மாறாக ராமர் கோவில் திறக்கப்பட்டபோதுதான் சுதந்திரம் அடைந்தது என்று இப்போது போலி யான முறையில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. எதார்த்தத்தை தெய்வீகம் விழுங்கிவிட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அடிப்படைப் பிரச்சனையை புறக்கணிக்கும் தெய்வீக விசுவாசம் ஆட்சியாளர்கள், கூட்டுக் களவாணி கார்ப்ப ரேட்டுகளை ஊட்டி வளர்த்துவருவதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் நமது உயிர்நாடியை யே அரித்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான இன்றைய நிஜ உலகை எதிர்த்துப் போராடுவது நாட்டு மக்களுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்ச னையாகும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கே வழியின்றித் தவிக்கும் நமது கோடிக் கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும் இது. ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கும் வேளை யில், அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற இலக்கை அடைவதற்கான போராட்டமாகும் இது. &nbsp;நமது இளைஞர்களும், இளைஞிகளும் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமை யைப் பெற்று, தங்கள் குடும்பங்களின் மற்றும் தேசத்தின் நல்வாழ்வில் ஆக்கப்பூர்வமான பங்க ளிப்பாளர்களாக மாறுவதற்கான போராட்டமாகும் இது. நாட்டின் தேசக் கோட்பாட்டை மறுவரையறை செய்யும் ஆர்எஸ்எஸ்-இன் திட்டத்தையும், அதன் மூலம் திட்டமிட்டுத் திணிக்கப்படும் தெய்வீக விசு வாசத்தின் வழியாக மக்களின் அடிப்படைப் பொரு ளாதாரப் பிரச்சனைகளைப் புறக்கணிப்பதையும் எதிர்கொள்ளாமல் இந்தப் போரில் வெற்றி பெற முடியாது. இது யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, எதார்த்தமான உலகை அங்கீகரிப்பதாகும். அந்தப் போராட்டத்திற்காக நாம் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்வோம். டிசம்பர் 13, 2025, &nbsp;தமிழில் : ச.வீரமணி</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.