தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பன்முகத்தன்மையும் நட்புறவும் பாதுகாக்கப்பட வேண்டும்

18 Feb 2026, 3:04 pm
பன்முகத்தன்மையும் நட்புறவும் பாதுகாக்கப்பட வேண்டும்

பன்முகத்தன்மையும் நட்புறவும் பாதுகாக்கப்பட வேண்டும்

வங்கதேசம், கடந்த சில மாதங்களாகச் சந்தித்து வந்த அரசியல் கொந்தளிப்புகளுக்குப் பிறகு, மக்கள் தீர்ப்பைப் பெற்ற ஒரு புதிய அர சைத் தேர்ந்தெடுத்துள்ளது. வங்கதேச தேசியவா தக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதம ராகப் பொறுப்பேற்றிருப்பது ஒரு புதிய சகாப்தத் தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இந்த ஜன நாயக மலர்ச்சி, வெறும் ஆட்சி மாற்றமாக மட்டும் நின்றுவிடாமல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரணாக அமைய வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தச் சூழலில், இந்தியா புதிய பிரதமருக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி முக்கியத்து வம் வாய்ந்தது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள் ளது. குறிப்பாக, வர்த்தகம், எரிசக்தி, தொழில் நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்தி யாவின் ஒத்துழைப்பு, வங்கதேசத்தின் நிலை யான வளர்ச்சிக்குப் பக்கபலமாக அமையும்.

ன சவால், அந்த நாட்டின் மதச்சார்பற்ற அடை யாளத்தைப் பாதுகாப்பதாகும். இடைக்கால ஆட்சியின் போது சிறுபான்மையினர் மீது நடத் தப்பட்ட தாக்குதல்கள் உலக அரங்கில் கவ லையை ஏற்படுத்தின. எனவே, புதிய அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதோடு, சிறுபான்மையினரின் உயிருக்கும், உடைமைக் கும், வழிபாட்டு உரிமைகளுக்கும் எவ்விதப் பங்க மும் வராமல் காக்க வேண்டும். மதச்சார்பற்ற முறையில் அரசு நிர்வாகம் நடைபெறுவது மட்டுமே சர்வதேச அளவில் வங்கதேசத்தின் நற் பெயரை மீட்டெடுக்கும். ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சியாக உருவெடுத் துள்ள நிலையில், அந்த அமைப்புகள் ஜனநாய கப் பாதையில் இணைந்து செயல்படுவது அவசி யமாகிறது.

மேலும், இந்திய-வங்கதேச உறவு என்பது வெறும் அரசுகளுக்கு இடையிலான உறவு மட்டு மல்ல, அது ‘மக்கள் சார்ந்த உறவு’. இந்தியத் தூத ரக அதிகாரிகள் வங்கதேசத்தின் பல்வேறு அரசியல் தரப்பினருடன் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சந்திப்புகள், இரு நாட்டு மக்க ளிடையேயான பிணைப்பை மேலும் வலுப் படுத்த வேண்டும். அதே வேளையில், இந்திய எல் லைப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதி யைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதச் சக்திகளு க்கு இடமளிக்காத ஒரு நிர்வாகத்தை வங்கதேசம் உறுதி செய்ய வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், வங்கதேசத்தில் மலர்ந்துள்ள ஜனநாயகம் என்பது பழிவாங்கும் அரசியலுக்கு இடமளிக்காத, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பயணமாக இருக்க வேண்டும். இந்தியாவின் நட்புறவுக் கரங்களை வங்கதேச புதிய அரசு சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், தெற் காசியாவின் மிகச்சிறந்த பொருளாதார சக்தியா கவும், அமைதிப் பூங்காவாகவும் அந்நாடு மிளிர  முடியும். இந்த ஜனநாயக விடியல் நிலைபெறவும், இரு நாட்டு உறவுகள் புதிய உயரத்தை எட்டவும் அந்த அரசு முயற்சிக் கட்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.