முந்தய பக்கம்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா

24 Feb 2026, 3:55 pm
மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா
<p><strong>மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா</strong></p> <p>ஈரோடு, பிப்.24- அந்தியூரில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அத்தாணி சாலை, கே.எஸ்.சி &nbsp;பள்ளி பிரிவு, நலம் மஹாலில் திங்களன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழாவில், கண்காட்சி &nbsp;மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார். இதன்பின் 10 விவசாயிகளுக்கு ரூ.21,94,452 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், அந்தியூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிபந்தனை பட்டாக்களை அயன் பட்டாக்களாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயி களிடம் நவீன தொழில் நுட்பங்களை தெரிவித்து உற்பத்தியை &nbsp;பெருக்கிடவும் திட்டமிடப்பட்டு ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங் கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கருத் தரங்கம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, சிறுதானிய உணவு வகைகள் குறித்து தனி யார் மற்றும் அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி, 30க்கும் மேற்பட்ட அரங்குகளை திறந்து வைத்து &nbsp;ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயத்தில் தொழில்நுட்ப குறித்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத் துரையாற்றினர். மேலும், சிறுதானிய சாகுபடி குறித்த விளக்க கையேடு வெளியிடப்பட்டது. இவ்விழாவில், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடசலம், வேளாண்மை இணை இயக்குநர் இரா.சிவக்குமார், வேளாண்மை துணை இயக்கு நர் பு.சு.அருள்வடிவு, அந்தியூர் வேளாண்மை உதவி இயக் குநர் முரளி, அந்தியூர் வட்டாட்சியர் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram