முந்தய பக்கம்

வாலிபர் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

19 Jan 2026, 2:23 pm
வாலிபர் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
<p><strong>வாலிபர் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி&nbsp;</strong></p> <p>குழித்துறை ,ஜன. 19 &nbsp;பொங்கல் விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மார்த்தாண்டம் வட்டார குழு சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 17 , 18 ஆகிய தேதிகளில் மார்த்தாண்டம் (வெட்டு வெந்தி) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி &nbsp;யில் நடைபெற்றது.முதல் பரிசு 50 ஆயிரம், இரண்டாவது பரிசு 30 ஆயிரம், 3 மற்றும் 4-வது பரிசு ரூபாய் 10 ஆயிரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. &nbsp;16 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. போட்டியை மருத்துவர்கள் எ. ஆர். சுனிசேகர், எ. ஆர் .சுபோத் சேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு &nbsp; இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ரெஜிஷ்குமார் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜினு ஜினால்டு, மாவட்டச் செயலாளர் விஷ்ணு, மாவட்ட பொருளாளர் விபின், வட்டாரச் செயலாளர் கிருஷ்ணராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழித்துறை நகரமன்ற உறுப்பினர்கள் சர்தார் ஷா, லலிதா, ஜெலிலா ராணி, ஜூலியட் மெர்லின் ரூத், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram