முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் வாகன சோதனை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு!

19 Mar 2026, 3:18 pm
ராணிப்பேட்டையில் வாகன சோதனை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு!
<p><strong>ராணிப்பேட்டையில் வாகன சோதனை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு!</strong></p> <p>ராணிப்பேட்டை, மார்ச் 19&ndash; சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்த பட்டு வருகின்றன. அதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு. சந்திரகலா பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். மாவட்ட எல்லைகளில் உள்ள 9 காவல் சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப் &nbsp;பட்டுள்ளது. பொன்னை அடுத்த வசூர் சோதனைச் சாவடியில் தேர்தல் அலுவலர் திடீர் ஆய்வு நடத்தினர். தேர்தல் பணிகள் தொடங்கியது முதல் இதுவரை தணிக்கை செய்யப்பட்ட வாகனங்கள் விவரங்களை ஆய்வு செய்தார். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ராணிப் &nbsp;பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நடு நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை ஆட்சி யர் பார்வையிட்டார். மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மகளிர் திட்டத் துறை &nbsp; யின் மூலம் பொதுமக்க ளிடையே தேர்தல் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகை யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் தேர்தல் அலுவலர் கலந்து கொண்டார். இதில் மகளிர் சுய உதவிக் குழு வினர் பங்கேற்று, 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram