தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

14 Mar 2026, 2:57 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

எரிவாயு சிலிண்டர் சீராக கிடைக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை திருப்பூர், மார்ச் 14 - மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் அமெரிக்கா  ஈரான் போரினால் தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நி லையை கருத்தில் கொண்டு, வீட்டு பயன்பாட்டிற்கான எரி வாயு சிலிண்டர்கள் சீரான மற்றும் தொய்வில்லாத விநியோ கத்தை பொதுமக்களுக்கு சிரமமின்றி வழங்குவதற்கு திருப் பூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு  அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எரிவாயு சிலிண் டர் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்படுமானால் இது  குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 0421 -2218455 –ற்கு தங்கள் புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம்  என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறி யுள்ளார்.

இன்று குரூப் 2 தேர்வு: 365 பேர் தேர்வெழுத உள்ளதாக தகவல் திருப்பூர், மார்ச் 14- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஞாயிற் றுக்கிழமை நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் - 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஞாயிற் றுக்கிழமை நடைபெறவுள்ளது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடி மைப் பணிகள் குரூப் 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத்  தோ்வு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பூர்  மாவட்டத்தில் இத்தேர்வை 365 பேர் எழுத உள்ளனர். திருப்பூர்  வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நி லைப் பள்ளி தேர்வுக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை  9.30 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல்  5.30 மணி வரை என இருவேளை தேர்வு நடைபெறவுள் ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்துக் குள் வர வேண்டும். அதன்பின் வருபவர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், மார்ச் 14- திருப்பூரில் பாலியஸ்டர் தையல்  நூலின் விலை நாளை முதல் 15 முதல்  20 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதட்டம் கார ணமாக, கச்சா எண்ணெய் விநியோ கம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நில வுகிறது. இதனால் பாலியஸ்டர் தையல் நூல் கச்சா எண்ணெயிலி ருந்து கிடைக்கும் துணை பொருட் களைக் கொண்டு தயாரிக்கப்படுவ தால், மூலப்பொருட்களின் விலை உயர்வை நூல் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தியுள்ளனர். பாலி யஸ்டர் நூலின் விலை நாளை முதல்  அமலுக்கு வரும் நிலையில், நூலின்  தரம் மற்றும் வகையை பொறுத்து 15 முதல் 20 சதவிகிதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு அனைத்து வாடிக்கையாளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என  திருப்பூர் தையல் நூல் வியாபாரிகள்  சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ள னர். இது தொடர்பாக தையல் நூல்  வியாபாரிகள் சங்கத்தின் பாஸ்கர் கூறுகையில், பாலியஸ்டர் மற்றும்  பாலிதீன் நூல்கள் உள்ளிட்ட பொருட் களை பின்னலாடை நிறுவனங்க ளுக்கு வழங்கி வருகிறோம். இந்த  பொருட்கள் கச்சா எண்ணெயில் இருந்து பெறப்படும் துணை பொருட் களை கொண்டே உற்பத்தி செய்யப்ப டுகின்றன. தற்போது கச்சா எண் ணெய் விலை உயர்வால், எங்களின் கொள்முதல் விலை 25 முதல் 30 சத விகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த  நிலை கடந்த 20 நாட்களாக நீடித்து  வருகிறது. விலை விரைவில் குறை யும் என்று எதிர்பார்த்திருந்த நிலை யில், மேலும் அதிகரிக்கும் சூழல்  இருப்பதால், வேறு வழியின்றி பாலி யஸ்டர் நூல்களின் விலையை 15  முதல் 20 சதவிகிதம் உயர்த்த சங்கம்  முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கு ஒன்றிய அரசு நிரந் தர விலை நிர்ணயம் செய்வது போல,  கச்சா எண்ணெயில் இருந்து தயா ராகும் இந்த பொருட்களுக்கும் நிரந்தர விலை நிர்ணயம் செய்தால்,  தையல் நூல்களின் விலையை சீராக  பராமரிக்க முடியும் என்று தெரிவித் தார்.

43 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்ட ஆணை

திருப்பூர், மார்ச் 14- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை யின் சார்பில் 43 பயனாளிகளுக்கு கலைஞ ரின் கனவு இல்லம் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை சனியன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அணைப்பாளையத்தில் அவிநாசி ஊராட்சி  ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, புதிய  மங்களம் 33/11 கே.வி துணை மின் நிலையம் ரூ.9.51 கோடி மதிப்பீட்டிலும், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், கத்தாங்கண்ணி ஊராட்சி, புதிய கத்தாக்கண்ணி 33/11 கே.வி துணை மின் நிலையம் ரூ.6.75 கோடி மதிப்பீட்டிலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், அணைப்பாளையம் ஊராட்சி, புதிய அணைப்பாளையம் 33/11  கே.வி துணை மின் நிலையம் ரூ.7.27 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.23.53 கோடி மதிப்பீட்டில் மூன்று  33/11 கே.வி துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

பாலியஸ்டர் தையல் நூல் விலை உயர்வு: நாளை முதல் 20% வரை அதிகரிப்பு

திருப்பூர், மார்ச் 14- திருப்பூரில் பாலியஸ்டர் தையல்  நூலின் விலை நாளை முதல் 15 முதல்  20 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதட்டம் கார ணமாக, கச்சா எண்ணெய் விநியோ கம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நில வுகிறது. இதனால் பாலியஸ்டர் தையல் நூல் கச்சா எண்ணெயிலி ருந்து கிடைக்கும் துணை பொருட் களைக் கொண்டு தயாரிக்கப்படுவ தால், மூலப்பொருட்களின் விலை உயர்வை நூல் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தியுள்ளனர். பாலி யஸ்டர் நூலின் விலை நாளை முதல்  அமலுக்கு வரும் நிலையில், நூலின்  தரம் மற்றும் வகையை பொறுத்து 15 முதல் 20 சதவிகிதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு அனைத்து வாடிக்கையாளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என  திருப்பூர் தையல் நூல் வியாபாரிகள்  சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ள னர். இது தொடர்பாக தையல் நூல்  வியாபாரிகள் சங்கத்தின் பாஸ்கர் கூறுகையில், பாலியஸ்டர் மற்றும்  பாலிதீன் நூல்கள் உள்ளிட்ட பொருட் களை பின்னலாடை நிறுவனங்க ளுக்கு வழங்கி வருகிறோம். இந்த  பொருட்கள் கச்சா எண்ணெயில் இருந்து பெறப்படும் துணை பொருட் களை கொண்டே உற்பத்தி செய்யப்ப டுகின்றன. தற்போது கச்சா எண் ணெய் விலை உயர்வால், எங்களின் கொள்முதல் விலை 25 முதல் 30 சத விகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த  நிலை கடந்த 20 நாட்களாக நீடித்து  வருகிறது. விலை விரைவில் குறை யும் என்று எதிர்பார்த்திருந்த நிலை யில், மேலும் அதிகரிக்கும் சூழல்  இருப்பதால், வேறு வழியின்றி பாலி யஸ்டர் நூல்களின் விலையை 15  முதல் 20 சதவிகிதம் உயர்த்த சங்கம்  முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கு ஒன்றிய அரசு நிரந் தர விலை நிர்ணயம் செய்வது போல,  கச்சா எண்ணெயில் இருந்து தயா ராகும் இந்த பொருட்களுக்கும் நிரந்தர விலை நிர்ணயம் செய்தால்,  தையல் நூல்களின் விலையை சீராக  பராமரிக்க முடியும் என்று தெரிவித் தார்.

பாலியல் தொல்லை அளித்த காவலர் செருப்பால் தாக்கிய கல்லூரி மாணவி உதகை, மார்ச் 14- உதகையில் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த காவலரை கல்லூரி மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்த மாணவி ஒருவர், கோவையிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பருவத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், தேர்வில் கலந்து கொள்ள மாணவி, கூடலூரிலிருந்து பாலக்காடு செல்லும்  அரசுப்பேருந்தில் கோவைக்கு வெள்ளியன்று பயணித்துள் ளார். தேர்வு எழுத தேவையான விஷயங்களை திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, கோவை காவல் நிலையத்தில் காவல ராக பணியாற்றும் ஒருவர், மாணவி அமர்ந்திருந்த இருக்கை யின் அருகே அமர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் தூங்கி விழுவது போல அந்த மாணவி மீது சாய்ந்துள்ளார். தூக்கத்தில் தெரியா மல் நடந்திருக்கலாம் எனக்கருதி மாணவி அமைதியாக இருந் துள்ளார். ஆனால், அந்த காவலர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் தெரிகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி, அவரின் தொல்லை எல்லை மீறிய நிலையில், உதகை பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும், ஆவேச மடைந்த மாணவி, தனது செருப்பை கழற்றி காவலரை தாக்கினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதகை மேற்கு காவல் துறையினர், அந்த காவலரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

7 சிறார்கள் உட்பட 24 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு ஈரோடு, மார்ச் 14- சரியாக சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமை போல் நடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த னர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலைய சர கத்திற்குட்பட்ட பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் கொத் தடிமை போல் நடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம், தொழி லாளர் நலத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், மொடக்குறிச்சி வட்டாட்சியர், கிராம நிர் வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற் கொண்டனர். அதில் ஓலப்பாளையம் கிராமத்தில் சத்திய மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில், கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்த வடமாநில தொழி லாளர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, மகா ராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர், போட்வாடி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் சதாசிங் ஷிண்டே என்ற ஏஜென்ட் மூலம் மத்தியபிரதேசம் மாநிலத்திலிருந்து 24 நபர்கள், மொடக் குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டங்க ளில் கரும்பு வெட்டும் கூலி வேலையில், கடந்த பிப்.22 ஆம் தேதி அமர்த்தியது தெரிய வந்தது. மேலும், தொழிலாளர்க ளுக்கு சரிவர சம்பளம் தராததும், சொந்த ஊர்களுக்கு அனுப்பாமாலும் இருப்பதாக கூறினர். இதனடிப்படையில் 4  சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 24 தொழிலாளர்க ளும் கடந்த மார்ச் 7 ஆம் தேதியன்று மீட்கப்பட்டனர். இதுகு றித்த புகாரின்பேரில், யுவராஜ் சதாசிங் ஷிண்டே மீது கொத்த டிமை தடுப்புச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை மாவட்ட கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டு, மார்ச் 10 ஆம் தேதி ஈரோட்டிலிருந்து வரு வாய்த்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு டன், மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

மகனை கொலை செய்த தந்தை கைது சேலம், மார்ச் 14- மது போதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்த மகனை, தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினம் அருகே உள்ள  மேட்டுப்பட்டி சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சூர்ய பிர காஷ் (24) என்ற மகனும், மணிமேகலை (27) மகளும் உள்ள னர். கடந்த மாதம் ஓமலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நகைக்கடையில் நடத் திருட்டு சம்பவத்தில் சூர்ய பிரகாஷ்  ஈடுபட்டு, சிறையிலிருந்து வெளியே வந்து கடந்த 10 நாள்  ஆன நிலையில், வெள்ளியன்று வீட்டிற்கு வந்துள்ளார். அப் போது வீட்டிலுள்ளவர்களிடம் “எதற்காக என்னை ஜாமினில் எடுக்கவில்லை” எனக்கூறி மது போதையில் கத்தியை  வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், விவசாயத்திற்கு பயன்படுத்தும் கொடுவாளால் தாக்கியதில் சூர்ய பிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவ லறிந்து வந்த காவல் துறையினரிடம், ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சரணடைந்தார். இதைத்தொடர்ந்து சூர்ய பிரகா ஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து, காமராஜை கைது செய்தனர்.

நடுக்கடலில் தவிக்கும் முட்டை கண்டெய்னர்கள் நடவடிக்கை எடுக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை நாமக்கல், மார்ச் 14- வளைகுடா நாடுகளில் நிலவும் போர் காரணமாக, முட்டை களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர்கள் நடுக்கடலில் சிக்கியுள்ள சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ் வரன் வலியுறுத்தியுள்ளார். வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரண மாக, கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாமக்கல்லி ருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டை கண்டெய்னர்கள்  நடுக்கடலில் சிக்கியுள்ளன. இதனால் கோழிப்பண்ணையா ளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாமக்கல்லிலி ருந்து அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட முட்டை கண்டெய்னர்கள், கடந்த 12 நாட்களாக நடுக்கடலில் சிக்கியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த முட்டைகள் காலாவதி தேதிக்குள் குறிப்பிட்ட நாடுக ளுக்கு சென்று சேரவில்லை என்றால், கோழிப்பண்ணை யாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மிகப்பெரிய நஷ் டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, ஒன்றிய  அரசு உடனடியாக தலையிட்டு, நடுக்கடலில் சிக்கியுள்ள முட்டை கண்டெய்னர்களை விரைந்து உரிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.