தடைசெய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பயன்படுத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
20 Feb 2026, 2:39 pm
<p><strong>தடைசெய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பயன்படுத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை</strong></p>
<p>திருப்பூர், பிப்.20- தடைசெய்யப்பட்ட நெகிழி கழிவு கள் பயன்படுத்திய 27 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள் ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாசு கட்டு பாடு வாரியம் சார்பில் மாவட்ட அளவி லான பணிக்குழு மற்றும் ஒருங்கி ணைப்புக் குழுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தெரிவித்தாத வது: தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் நெகிழி கழிவுகள் பயன்பாட்டை தடைசெய்யும் நீதி பேரானை நடைமுறைப்படுத்த சமந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு களின் நிருவாகத்திற்குற்பட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டது. மேலும், நெகிழி மாசுபாட்டைக் குறைக்க மாவட்ட அளவிலான மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். சுற்று சூழலுக்கு உகந்த மாற்றுப்பொ ருட்கள் பயன்பாட்டை ஊக்குவித்து பரப்புரைகள் மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. விதி மீறலில் ஈடுபட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட அனு மதி கோரியுள்ள நிறுவனங்கள் எண் ணிக்கை 27. மேலும், தமிழ்நாடு மாசு கட் டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வினை தீவி ரப்படுத்தி தவறிழைக்கும் தொழிற்சா லைகளை கண்டறியும்படி அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர்கள் (திருப்பூர் வடக்கு) பாரதிராஜா, (திருப்பூர் தெற்கு) ரங்க ராஜ், பறக்கும் படை செயல் அலுவலர் லாவண்யா, மாவட்ட சுற்றுலா அலுவ லர் அரவிந்த் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
